இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் கோழிப் பண்ணைத் துறையும் | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | Dr. சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்
Description
கால்நடை வளர்ப்பு கிராமியப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான கூறாகும். இலங்கையின் கால்நடை வளர்ப்பின் மிக முக்கியமான கூறுகளான மாடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பைப் பற்றிய தொடராக இது அமையப்போகிறது.
கால்நடை வளர்ப்புப் பொருளாதாரத்தின் அடிப்படைகள், சவால்கள், தீர்வுகள் ஏனைய நாடுகளின் நிலைமைகளை ஒப்பீடு செய்தல் என இது அமையப்போகிறது.
மக்களின் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் கோழி வளர்ப்பு இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் அதன் தாக்கம் எதிர்காலத்தில் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனையும் விளக்குவதாக முதலாவது கட்டுரைத் தொடர் அமையப்போகின்றது.
சந்தையில் கோழி முட்டை ஐம்பது ரூபா வரையிலும் கோழி இறைச்சி ஆயிரத்து ஐநூறைத் தாண்டியும் விற்பனையாகிறது. சில இடங்களில் இன்னும் அதிகமாக இருக்கலாம். இந்தக் கட்டுரை மனிதனுக்கு புரதம் முதலான ஊட்டச்சத்துக்களை வழங்கும் மிக முக்கியமான உணவுகளான கோழியிறைச்சி மற்றும் முட்டையை தரும் இலங்கையின் கோழிப் பண்ணைத் துறை நாட்டின் பொருளாதார பின்னடைவின் காரணமாக சந்திக்கும் சவால்களை ஆராய்கிறது.
#ruraleconomics #ruraldevelopment #socialimpact #socialgood #resources #poverty #foodsecurity #sustainabledevelopment #communitydevelopment #farming #livestock #poultryfarming